பாக். எதிரான டெஸ்ட்டில் கசுன் பங்கேற்க மாட்டார்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் கசுன் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

by Staff Writer 16-12-2019 | 7:27 PM
Colombo (News 1st) இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித்த உபாதை காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், கசுன் ராஜித்தவின் வெற்றிடத்துக்குப் பதிலாக குழாத்தில் மாற்று வீரர் பெயரிடப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உபாதைக்குள்ளான ​வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலின் வெற்றிடத்துக்குப் பதிலாக அசித்த பெர்னாண்டோ இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டிருந்தார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி கராய்ச்சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.