கோதுமை மா வரி - 36 இலிருந்து 8 ரூபாவாக குறைப்பு

கோதுமை மாவுக்கான வரி 36 இலிருந்து 8 ரூபாவாக குறைப்பு

by Fazlullah Mubarak 16-12-2019 | 12:39 PM

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படுகின்ற கோதுமை மாவுக்கான ஒன்றிணைந்த தீர்வை வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 36 ரூபா ஒன்றிணைந்த தீர்வை வரியை நீக்கி அதற்கு பதிலாக 8 ரூபா விசேட வர்த்தக பொருட்கள் வரியை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் புதிய விசேட வர்த்தக பொருள் வரி டிசம்பர் 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசேட பொருட்கள் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் கோதுமை மாவை இறக்குமதி செய்து போட்டித்தன்மையுடன் கூடிய விலையில் விநியோகிப்பதற்கான சந்தர்ப்பம் அனைத்து வர்த்தகர்களுக்கும் கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஏனைய செய்திகள்