ஜனாதிபதி தேர்தல் கால சுற்றிவளைப்பில் 22 பேர் கைது

ஜனாதிபதித் தேர்தல் கால சுற்றிவளைப்பில் 22 பேர் கைது

by Staff Writer 15-12-2019 | 7:09 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் பாதாள குழுவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 19 ஆம் திகதி முதல் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கபபட்டுள்ளன. இதில் போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதாளக் குழுத் தலைவர் அங்கொட லொக்கா மற்றும் ஊரு ஜூவா ஆகியோரின் உதவியாளர்கள் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். அங்கொட, ரனால, ஹங்வெல்ல உள்ளிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கப்பம் பெறுவது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.