ஜமைக்காவின் டொனி ஆன் சிங் உலக அழகி மகுடம் சூடினார்

ஜமைக்காவின் டொனி ஆன் சிங் உலக அழகி மகுடம் சூடினார்

ஜமைக்காவின் டொனி ஆன் சிங் உலக அழகி மகுடம் சூடினார்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2019 | 9:40 am

Colombo (News 1st) இம்முறை உலக அழகியாக ஜமைக்காவின் டொனி ஆன் சிங் (Toni Ann Singh) மகுடம் சூடியுள்ளார்.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இம்முறை உலக அழகிக்கான போட்டி இடம்பெற்றது.

இறுதிச்சுற்றில் பிரான்சின் ஓஸ்லி மெசினோ மற்றும் இந்தியாவின் சுமன் ராவ் ஆகியோருடன் போட்டியிட்ட டொனி ஆன் சிங், உலக அழகியாக தெரிவாகியுள்ளார்.

23 வயதான டொனி ஆன் சிங், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் மகளிர் மற்றும் உளவியல் துறைசார் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகி பட்டத்தை வென்ற நான்காவது ஜமைக்கா பெண்ணான டொனி ஆன் சிங், தனது வாழ்க்கையில் சமூக நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ளார்.

தனது கனவுகளை அடைவதற்கு உந்துசக்தியாக உள்ள தனது தாய் தனது வாழ்வின் முக்கிய பங்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது வெற்றி உலகிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்