காட்டு யானை அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த புதிய அதிகாரிகளை இணைக்கத் தீர்மானம்

காட்டு யானை அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த புதிய அதிகாரிகளை இணைக்கத் தீர்மானம்

காட்டு யானை அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த புதிய அதிகாரிகளை இணைக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2019 | 10:16 am

Colombo (News 1st) காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கு புதிதாக 400 உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு 2,000 சிவில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தவுள்ளதாகவும் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமரவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் 1992 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக, காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் குறித்து அறிவிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், யானை வேலிகளுக்கு அண்மையில் 460 விசேட கட்டுப்பாட்டு அறைகளை ஸ்தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமரவீர திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்