காசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு

காசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு

காசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2019 | 1:37 pm

Colombo (News 1st) காசநோயினால் வருடாந்தம் 400 இற்கும் அதிகமானோர் நாட்டில் உயிரிழப்பதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகமான காச நோயாளர்கள் பதிவாகுவதாக காசநோய் ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 1000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசநோய் முழுமையாகக் குணமாகக்கூடிய நோய் எனவும் நோயைக் கண்டறிவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட வைத்தியசாலைகளில் காணப்படுவதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் இருமல் 15 நாட்களுக்கும் மேலாக நீடித்தால், அருகிலுள்ள வைத்தியரை நாடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

காசநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அடுத்த வருடம் முதல் நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சுகாதாரப் பிரிவு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்