இயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை

இயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை

இயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2019 | 1:41 pm

Colombo (News 1st) இரண்டு இயற்கை வாயு மின் நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கெரவலப்பிட்டி பகுதியைக் கேந்திரமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள மின் நிலையங்களின் திட்டமிடல் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரநிதிகள் சிலர் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் பங்கேற்றனர்.

இயற்கை வாயு மின் நிலையங்கள் ஊடாக 300 மெகாவாட் மின்சாரம், தேசியமின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படும் எனவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்