by Staff Writer 14-12-2019 | 4:59 PM
Colombo (News 1st) மொரகஹஹேன பகுதியில் 3 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளை காரில் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையதென பொலிஸார் குறிப்பிட்டனர்.
குளியாப்பிட்டிய மற்றும் ஹோமாகம பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பில் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நாடளாவிய ரீதியில் நடத்திய சுற்றிவளைப்புகளில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கல்ல, ரத்கம, மாத்தறை மற்றும் ஹங்வெல்ல பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த 4500 மில்லிகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.