by Staff Writer 14-12-2019 | 4:27 PM
Colombo (News 1st) பொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கான பிரதான துறைகளை இனங்கண்டு அர்ப்பணிப்புடன் செயற்படவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம், கிழக்கு கொள்கலன் இறங்குதுறை உள்ளிட்ட துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, அதிவேக வீதிகள், விவசாயம், அதிநவீன தொலைக்காட்சி தரவுப் பரிமாற்றம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஜப்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மொடேகி டொஷிமிட்சு (Motegi Toshimitsu) உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஜப்பானிய உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் நேற்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.