இலங்கை – பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இலங்கை – பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இலங்கை – பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2019 | 6:06 pm

Colombo (News 1st) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.

போட்டியில் முதல் மூன்று நாட்களும் மழை மற்றும் சீரற்ற வானிலையால் ஆட்டம் தடைப்பட்டது.

ராவல்பிண்டியில் பெய்யும் கடும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றி முடிவுறும் நிலை உருவாகியுள்ளதுடன், இது 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் முதல் டெஸ்ட் போட்டியாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்