இலங்கையில் 7 புதிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

இலங்கையில் 7 புதிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

இலங்கையில் 7 புதிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2019 | 7:43 pm

Colombo (News 1st) இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் சிவில் சமூகத்தினருக்காகவும் 7 புதிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

மனித உரிமைகள், சட்டவாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது தமது அமைப்பின் முக்கிய நோக்கம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையின்றி, சுற்றாடல் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நீண்டகால அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை அடைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் செயற்படும் மனித உரிமைகள் – சிவில் அமைப்புகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்படுவதுடன், அந்த அமைப்பூடாக குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக 812 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்