ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமனம்

ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமனம்

ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

13 Dec, 2019 | 3:58 pm

Colombo (News 1st) இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கான அதிவிசேட வர்த்தமானியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.

ரஞ்சித் சொய்சா காலமானதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெற்றவர்கள் வரிசையில் அடுத்த இடத்தில் வருண பிரியந்த லியனகே காணப்பட்டார்.

ரஞ்சித் சொய்சா காலமானதன் பின்னர் இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்