English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
13 Dec, 2019 | 5:10 pm
நடிகை காஜல் அகர்வால் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வால் 2004-இல் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இந்த வருடம் அவரது நடிப்பில் வந்த கோமாளி படத்திற்கும் வரவேற்பு கிடைத்தது. இப்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தணிக்கை குழு கெடுபிடியால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 வயது ஆகிறது. இந்த நிலையில், காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
25 Feb, 2021 | 03:27 PM
31 Oct, 2020 | 02:53 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS