பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று

பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று

by Staff Writer 12-12-2019 | 1:08 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் இன்று (12) பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. கடந்த 5 வருடங்களில் இடம்பெறும் மூன்றாவது பொதுத்தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 650 வாக்களிப்பு நிலையங்களில் இங்கிலாந்து நேரப்படி காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. first-past-the-post முறைப்படி 650 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு வாக்களிப்பு நிறைவு பெறுவதுடன் அதனைத் தொடர்ந்து வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. 2017 இல் நியூகெஸ்ட்டல் சென்ட்ரல் பிராந்தியத்தில் வாக்களிப்பு இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தில் முடிவு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.