கடற்றொழிலாளர்களின் பிளாஸ்டிக் பாவனை கண்காணிப்பு

கடற்றொழிலாளர்களின் பிளாஸ்டிக் பாவனை கண்காணிப்பு

by Staff Writer 12-12-2019 | 9:57 AM
Colombo (News 1st) கடற்றொழிலுக்கு செல்லும்போது கொண்டுசெல்லக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடற்றொழிலுக்கு செல்லும்போது கொண்டுசெல்லப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் வீசப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பொது முகாமையாளர், கலாநிதி டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டுள்ளார். ஒரு லீற்றர் கொள்ளளவுடைய தண்ணீர் போத்தல்கள் 500 தொடக்கம் 1000 வரை கடற்றொழிலுக்கு செல்லும்போது கொண்டு செல்லப்படுவதாக இதன்போது அவர் கூறியுள்ளார். இந்த போத்தல்கள் கடலில் வீசப்படுவதாகவும் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 5 லீற்றர் கொள்ளளவான தண்ணீர் போத்தல்களை கடற்றொழிலாளர்களிடம் அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், கலாநிதி டர்னி பிரதீப் குமார மேலும் குறிப்பிட்டுள்ளார்.