அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

by Staff Writer 12-12-2019 | 6:59 AM
Colombo (News 1st) அரசியலமைப்புப் பேரவை இன்று (12) கூடவுள்ளது. பேரவையின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பேரவைக்கு உத்தியோகபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களாவர். பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துள்ளதால் அவரால் இன்று அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியும். எனினும், எதிர்க்கட்சித் தலைவராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவிற்கு இன்றைய அரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. பாராளுமன்றம் கூடி எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி ஏற்காமையால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு சபை கூடவுள்ளது. இதேவேளை, அரசியலமைப்புப் பேரவைவை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு இன்றைய கூட்டத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.