by Staff Writer 12-12-2019 | 9:12 PM
Colombo (News 1st) தம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய ஊடகத்துறைக்கான முன்னாள் பிரதானி மதூக தக்சல பர்ணாந்து அண்மையில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கத்துடன் தொடர்புபட்ட சிலர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று வாக்குமூலம் வழங்கினர்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பொதுஜன பெரமுனவின் தேசிய சங்கத்தில் ஏழு உறுப்பினர்களிடம் பொலிஸார் இன்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.