பூரணை தினத்தில் மதுபான விற்பனை; 4 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

பூரணை தினத்தில் மதுபான விற்பனை; 4 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

பூரணை தினத்தில் மதுபான விற்பனை; 4 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2019 | 1:20 pm

Colombo (News 1st) பூரணை தினத்தில் மதுபானம் விற்பனை செய்த 4 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடுமுறை தின மற்றும் கலால்வரி சட்டங்களை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் காணப்பட்ட 4 மதுபான விற்பனை நிலையங்களுக்கே சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்காக இரு விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி மதுபானசாலைகளை நடாத்துதல் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு ஒரு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மதிவரி சட்டங்களுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தொடர்பான சுற்றிவளைப்பிற்கு மற்றுமொரு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை இந்த இரு பிரிவுகளும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்