by Staff Writer 12-12-2019 | 8:33 AM
Colombo (News 1st) கொழும்பில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும், சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸுக்கு இன்றைய தினமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்ஸிடம் 3 நாட்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட அனுமதியின் பின்னரே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் இன்று நிதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவரை மீண்டும் அவருடைய நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து பொய்யானது என வௌிநாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.