கோதுமைக்கான இறக்குமதி வரியை குறைக்க அனுமதி

கோதுமைக்கான இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 12-12-2019 | 11:44 AM
Colombo (News 1st) கோதுமை மா இறக்குமதிக்கான வரியைத் தற்காலிகமாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பண்டிகைக் காலகத்தில் கோதுமை மா மற்றும் கோதுமை மா உற்பத்திகளின் விலையை குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பெரும்போக அறுவடை கிடைக்கும் வரை கோதுமைக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.