காட்டுத்தீயில் சிக்கி 2000 கோலா கரடிகள் பலி

அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 2000 கோலா கரடிகள் உயிரிழப்பு

by Bella Dalima 11-12-2019 | 6:27 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000 கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. 2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் 4 பேர் பலியாகினர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் தற்போதும் இந்த காட்டுத்தீ முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. சுமார் 50 இடங்களில் தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000 கோலா கரடிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காட்டுத்தீ தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் சூழலியல் நிபுணர் ஒருவர் இத்தகவலை வௌியிட்டுள்ளார்.