மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவில் கைது

மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவில் கைது

மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவில் கைது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Dec, 2019 | 10:17 am

Colombo (News 1st) மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனாரோ காரிஸியா லுனா (Genaro Garcia Luna) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குழுவிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகத் தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மன்னனான El Chapo Guzman இன் Sinaloa கடத்தல் குழு மெக்ஸிக்கோவில் இயங்குவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றுள்ளதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கனவே மறுத்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மெக்ஸிக்கோ பொதுப் பாதுகாப்பு அமைச்சராக அவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்