பாலாவியில் ஒரு தொகை ஆமைகளுடன் ஒருவர் கைது

பாலாவியில் ஒரு தொகை ஆமைகளுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2019 | 2:05 pm

Colombo (News 1st) புத்தளம் – பாலாவி பகுதியில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டிருந்த ஆமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலாவி விமானப்படை புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று இரவு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றிலிருந்து சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட 51 ஆமைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆமைகளை சேகரித்து வந்த விருதோடையைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (11) புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்