நுகேகொடை உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்வெட்டு

நுகேகொடை உள்ளிட்ட சில பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 11-12-2019 | 8:51 AM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்று (11) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மிரிஹான, எத்துல்கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையிலான 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியவசிய புனரமைப்புப் பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்