ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2019 | 8:18 pm

Colombo (News 1st) ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) நாளை (12) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து, இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

நாளை மாலை 5.30-க்கு நாட்டை வந்தடையவுள்ள அவர், எதிர்வரும் 14ஆம் திகதி வரை தங்கியிருக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து, ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்