எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவர், உப தலைவர் நியமனம்

எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவர், உப தலைவர் நியமனம்

எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவர், உப தலைவர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2019 | 1:06 pm

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோரின் பெயர்கள் வர்த்தமானி ஊடாக வௌியிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், புதிய தலைவராக பொன்னம்பெரும ஆரச்சிகே கருணாசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் உப தலைவராக நாகொட விதானகே ஜயசேன பெயரிடப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட ஆணைக்குழுவின் 3 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களை கைப்பற்றியது.

ஐக்கிய தேசிய கட்சி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் கைப்பற்றின.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்