இலங்கை - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர்

இலங்கை - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் இன்று

by Staff Writer 11-12-2019 | 8:32 AM
Colombo (News 1st) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டி ராவல்பின்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்களின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரொன்று நடத்தப்படவுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரையில் 53 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் பாகிஸ்தான் 19 போட்டிகளிலும் இலங்கை அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 18 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது.