மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி 

2020ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாக தோற்கடிப்பு

by Staff Writer 10-12-2019 | 7:25 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபையின் தலைவர் மொஹமட் முஜாஹீரினால் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் சபையினருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் சபையில் எதிர்ப்பு தெரிவித்தார். வரவு செலவு திட்டம் தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டதோடு இதற்கு ஆதரவாக 9 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.