மல்லாவியில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு

மல்லாவியில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு

மல்லாவியில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2019 | 8:53 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – மல்லாவியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு – திருநகரை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மல்லாவி மங்கை குடியிருப்பு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு நேற்றிரவு சென்றுள்ளார்.

இதன்போது, இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கு சென்ற இனந்தெரியாத சிலர் இந்த இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞரின் காலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்