மகாவலியில் காணாமல்போன இருவரும் சடலங்களாக மீட்பு

மகாவலியில் காணாமல்போன இருவரும் சடலங்களாக மீட்பு

மகாவலியில் காணாமல்போன இருவரும் சடலங்களாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2019 | 9:56 am

Colombo (News 1st) திருகோணமலை – கிண்ணியா மகாவலி கங்கையில் காணாமல்போன இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மஹாவலி கங்கையில் படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்து மேலும் இருவர் காணாமல் போயிருந்தனர்.

வயல்வௌியில் காவலில் ஈடுபட்டிருந்த 19, 29, 31 மற்றும் 39 வயதுடைய நால்வர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமையாக தரை வழியாக செல்பவர்கள் சீரற்ற வானிலை காரணமாக படகில் மூலம் தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் பயணித்த படகு கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

படகில் சென்றவர்களில் ஒருவர் நீந்தி கரையேறியதுடன் மற்றுமொருவர் அங்கிருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டிருந்தார்.

நீரில் மூழ்கியவர்களில் ஒருவரது சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்