பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க பெண் தெரிவு

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க பெண் தெரிவு

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க பெண் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2019 | 4:16 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 2019 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்களில் தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, கொலம்பியோ, பியூர்டோ ரிகோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 5 அழகிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 26 வயதான மாடல் அழகி சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தெரிவான பிலிப்பைன்ஸை சேர்ந்த கேட்ரியோனா கிரோ மகுடம் சூட்டினார்.

இரண்டாவது இடத்தை பியூர்டோ ரிகோவின் மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோவை சேர்ந்த சோபியா மூன்றாவது இடம் பிடித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்