தெற்காசிய விளையாட்டு விழா நிறைவு: இலங்கைக்கு 250 பதக்கங்கள்

தெற்காசிய விளையாட்டு விழா நிறைவு: இலங்கைக்கு 250 பதக்கங்கள்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2019 | 9:20 pm

Colombo (News 1st) 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 172 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியனானது.

இலங்கை 51 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாமிடத்தை பிடித்தது.

கடந்த 10 நாட்களாக நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 2700-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

172 தங்கங்களுடன் மொத்தமாக 310 பதக்கங்களை சுவீகரித்த இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

நேபாளம் 51 தங்கங்களுடன் மொத்தமாக 204 பதக்கங்களை வென்று இரண்டாமிடத்தை பிடித்தது.

40 தங்கங்களுடன் மொத்தமாக 250 பதக்கங்களை வென்ற இலங்கை மூன்றாமிடத்தை பிடித்தது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தவுள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெற்காசிய விளையாட்டு விழாவிற்கான உத்தியோகப்பூர்வ கொடி கையளிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்