உலகின் மிகவும் இள வயது பிரதமராக பின்லாந்தின் சன்னா மரீன் தெரிவு

உலகின் மிகவும் இள வயது பிரதமராக பின்லாந்தின் சன்னா மரீன் தெரிவு

உலகின் மிகவும் இள வயது பிரதமராக பின்லாந்தின் சன்னா மரீன் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2019 | 4:35 pm

Colombo (News 1st) வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் 34 வயது சன்னா மரீன் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இவர் தான் உலகின் தற்போதைய பிரதமர்களிலேயே மிகவும் இள வயதுடையவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தில் தபால்துறையினா் வேலை நிறுத்தத்தால் உருவான அரசியல் நெருக்கடி காரணமாக, அந்நாட்டுப் பிரதமா் அன்ட்டி ரின்னே (57) தனது பதவியை இராஜிநாமா செய்தாா்.

அவருக்குப் பதிலாக, அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே ஞாயிற்றுக்கிழமை (08) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்புத்துறை அமைச்சராக இருந்த சன்னா மரீன் பிரதமராகத் தொ்ந்தெடுக்கப்பட்டாா்.

34 வயதான சன்னா மரீன், தற்போது உலகம் முழுவதும் ஆட்சியிலிருக்கும் பிரதமர்களிலேயே மிகவும் குறைந்த வயதுடையவா் ஆவார். மேலும், பின்லாந்து வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் பிரதமராகப் பொறுப்பேற்பவா் என்ற பெருமையையும், பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமா் என்ற பெருமையையும் சன்னா மரீன் பெறுகிறாா்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்