இரத்தினபுரியில் பெண் கொ​லை: இருவர் கைது

இரத்தினபுரியில் பெண் கொ​லை: இருவர் கைது

இரத்தினபுரியில் பெண் கொ​லை: இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2019 | 4:52 pm

Colombo (News 1st) இரத்தினபுரி – கஹவத்தை, கலுக்கல பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

68 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது கணவருக்கு பிணை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர் வீட்டிற்கு வந்த போதே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொலை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலுன்கல பகுதியை சேர்ந்த 28 மற்றும் 45 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்கள் நாளை (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கஹவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்