ரஷ்ய - யுக்ரைன் ஜனாதிபதிகள் இடையே பேச்சுவார்த்தை

ரஷ்ய - யுக்ரைன் ஜனாதிபதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை

by Staff Writer 09-12-2019 | 8:32 PM
Colombo (News 1st) ரஷ்ய மற்றும் யுக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையில் முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கிழக்கு யுக்ரைனில் கடந்த ஐந்தரை வருடங்களாக இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாரிஸில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், யுக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் இணைந்து கொள்கின்றனர். மேலும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் அரச தலைவர்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர். ரஷ்யாவிற்கும் யுக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 13,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சமாதான ஏற்பாடுகளுக்காக 3 பிரதேசங்களிலிருந்து யுக்ரைன் வௌியேறியதுடன், சில தொடர் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.