பரசூட் முறையிலான நெற்செய்கை

பரசூட் முறையிலான நெற்செய்கை

by Staff Writer 09-12-2019 | 4:37 PM
Colombo (News 1st) விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை உடஹேவாகெட்ட, ஹங்குராங்கெத்த பிரதேச விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது. இந்தப் பகுதி விவசாயிகள் அனைவரும் பரசூட் முறை நெற்செய்கையிலேயே ஈடுபட்டு வருவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சுமார் 4000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் இந்த முறையிலான செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. பரசூட் முறை நெற்செய்கைக்கு மனிதவலு குறைவாகவே தேவைப்படுவதால், செலவு குறைவு என்பதுடன் விளைச்சலும் அதிகமாகக் கிடைப்பதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.