பால்மா விலையில் மாற்றம்

பால்மா விலையில் மாற்றம்

பால்மா விலையில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2019 | 2:50 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பால்மா 40 ரூபாவாலும் 400 கிராம் பால்மா 15 ரூபாவாலும் இன்று (09) முதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் செனவீர குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளுக்கு அமைய இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வரிச்சலுகைக்கான பலனை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்