நீர் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

நீர் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2019 | 6:49 pm

Colombo (News 1st) நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தௌிவுபடுத்தியுள்ளார்.

நீர்கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிகமாக நீரை விரயமாக்கும், அதிக வருமானம் பெறும் குடும்பங்களின் நீர்விநியோகக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முதல் 15 அலகுகளுக்கான கட்டணத்தில் மாற்றம் ஏற்பாடாது என அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, நீர் கட்டணத்தைக் கட்டாயமாக அதிகரிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்