நியூஸிலாந்தில் எரிமலை குமுறல் ; ஐவர் உயிரிழப்பு

நியூஸிலாந்தில் எரிமலை குமுறல் ; ஐவர் உயிரிழப்பு

நியூஸிலாந்தில் எரிமலை குமுறல் ; ஐவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Dec, 2019 | 3:12 pm

Colombo (News 1st) நியூஸிலாந்தில் எரிமலை ஒன்று வெடித்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

வௌ்ளைத்தீவிலுள்ள குறித்த எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, அதன் வாய் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 சுற்றுலாப்பயணிகள் எரிமலைக்கு அருகாக இருந்த நிலையிலேயே, நியூஸிலாந்து நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகளில் பலர் காணாமற்போயுள்ளதுடன், அந்தப் பகுதியெங்கும் புகை வியாபித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்