திருகோணமலையில் கவிழ்ந்த படகு – உயிர்ச்சேதமும் பதிவு

திருகோணமலையில் கவிழ்ந்த படகு – உயிர்ச்சேதமும் பதிவு

திருகோணமலையில் கவிழ்ந்த படகு – உயிர்ச்சேதமும் பதிவு

எழுத்தாளர் Fazlullah Mubarak

08 Dec, 2019 | 9:10 pm

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மஹாவலி கங்கையில் படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்து மேலும் இருவர் காணாமற் போயுள்ளனர்.

 

வயல் வௌியில் காவலில் ஈடுபட்டுவிட்டு இன்று காலை வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமையாக தரை வழியாக செல்பவர்கள் சீரற்ற வானிலை காரணமாக படகில் மூலம் தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இந் நிலையில் இவர்கள் பயணித்த படகு, கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகில் சென்றவர்களில் ஒருவர் நீந்தி கரையேறியதுடன் மற்றுமொருவரை அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

நீரில் மூழ்கியவர்களில் ஒருவரது சடலத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த புல்மோட்டையை சேர்ந்த மொஹம்மட் இல்ஹாமின் ஜனாஸா கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படகில் சென்று காணாமற்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்