மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்

மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்

by Staff Writer 07-12-2019 | 4:20 PM
Colombo (News 1st) வடக்கு , வடமத்திய , கிழக்கு , ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை நாளை மறுதினத்திலிருந்து (09) மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ , ஊவா மாகாணங்களிலும் காலி , மாத்தறை , களுத்துறை மாவட்டங்களிலும் 50 தொடக்கம் 70 மில்லிமீட்டர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.