by Staff Writer 07-12-2019 | 3:55 PM
Colombo (News 1st) ஜா-எல பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் கைத்துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காலின் சுண்டுவிரலிலேயே அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக நேற்று (06) மாலை சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியே தவறுதலாக செயற்பட்டுள்ளது.
காயமடைந்த பெண் ஜா-எல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜா-எல பகுதியை சேர்ந்த ஒரு குழந்தையின் தாயே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.