by Staff Writer 07-12-2019 | 8:53 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகரை இலங்கையின் வரைபடத்துடன் இணைக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
269 ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்ட இந்தப் பகுதியை நிரப்பும் நடவடிக்கை சீன அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
இதற்கான நினைவு முத்திரையும் கடித உறையும் இன்று வௌியிடப்பட்டன.
நிகழ்வினை முன்னிட்டு துறைமுக நகர வளாகத்தில் வான வேடிக்கை கண்காட்சியும் நடைபெற்றது.