மலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது

மலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது

மலையக மார்க்க ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2019 | 5:12 pm

Colombo (News 1st) மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்த மலையக மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் ரயில் சேவை வழமைக்கு திரும்பியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

அதிக மழையுடனான காலநிலையால் பண்டாரவளை – தியத்தலாவ இடையில் ஓபொடஎல்ல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.

இந்நிலையில், மண்மேட்டை அகற்றும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பண்டாரவளை மற்றும் தியத்தலாவ இடையிலான ரயில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்