பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் எரித்துக்கொலை: ஐவர் கைது

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் எரித்துக்கொலை: ஐவர் கைது

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் எரித்துக்கொலை: ஐவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2019 | 3:43 pm

Colombo (News 1st) உத்தர பிரதேஷ் – உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டு வழக்குத்தாக்கல் செய்திருந்த நிலையில், எரியூட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு இளைஞர்கள் மற்றும் அவர்களின் தந்தையால் தாம் கத்தியால் குத்தப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டதாக குறித்த பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வழக்கு விசாரணைக்காக சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உன்னாவோ பகுதி ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து அவர் தாக்கி எரியூட்டப்பட்டார்.

உத்தர பிரதேஷில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்ட அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்