ஏப்ரல் 21 தாக்குதல்: ஆணைக்குழு நேர்மையாக செயற்படும் என நம்புவதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: ஆணைக்குழு நேர்மையாக செயற்படும் என நம்புவதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2019 | 7:38 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கொழும்பு பேராயர் பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இரண்டாவது நாளாகவும் இன்று சென்றிருந்தார்.

ஆணைக்குழுவிற்கு வருகை தந்து சாட்சியமளிக்குமாறு பேராயரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, இன்று பகல் 1.30-க்கு அவர் அங்கு சென்றிருந்தார்.

இதனையடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த பேராயர், தாம் அறிந்த விடயங்களை ஆணைக்குழுவிற்கு கூறியதாகவும் விசாரணைகளை அடுத்து ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளை அரசாங்கத்திலுள்ள எவரேனும் நடைமுறைப்படுத்துவார்கள் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஆணைக்குழு நேர்மையாகவும் சிறப்பாகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நம்புவதாகவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

பேராயர் நான்கு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் நேற்று (06) ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்