பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்

பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்

பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2019 | 3:58 pm

Colombo (News 1st) பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 50 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை காலம் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளுக்கு 17 வீத வரி செலுத்தப்பட்டு வந்ததாகவும் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

எனினும், தற்போது அரசாங்கத்தினால் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதால் இதுவரை காலம் பேக்கரி உற்பத்திகளுக்கு அறிவிடப்பட்டு வந்த வரி முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்