பலத்த மழையால் முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலம் தாழிறங்கியது

பலத்த மழையால் முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலம் தாழிறங்கியது

பலத்த மழையால் முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலம் தாழிறங்கியது

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2019 | 4:14 pm

Colombo (News 1st) பலத்த மழை காரணமாக முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலம் உடைப்பெடுத்துள்ளது.

இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

இதன் காரணமாக முல்லைத்தீவு – பரந்தன் வீதியுடனான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனிடையே யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் 100 தொடக்கம் 200 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்