கொழும்பு 10 மற்றும் 12-இற்கான நீர் விநியோகம் நாளை காலை 8 மணி வரை தடைப்பட்டுள்ளது

கொழும்பு 10 மற்றும் 12-இற்கான நீர் விநியோகம் நாளை காலை 8 மணி வரை தடைப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2019 | 4:33 pm

Colombo (News 1st) லபுகமையிலிருந்து கொழும்பிற்கு நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் கட்டமைப்பில் கொட்டிகாவத்தை பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது.

குழாயை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12-இற்கான நீர் விநியோகம் நாளை காலை 8 மணி வரை தடைப்பட்டுள்ளது.

கொழும்பு 11,13 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக பழைய அவிசாவளை வீதி, கொட்டிகாவத்தை பகுதியில் மூடப்பட்டுள்ளதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்