உயர்தரப் பிரிவு பரீட்சைக்கு தோற்றும் அனைவருக்கும் பல்கலைக்கழகம் செல்ல சந்தர்ப்பம்

உயர்தரப் பிரிவு பரீட்சைக்கு தோற்றும் அனைவருக்கும் பல்கலைக்கழகம் செல்ல சந்தர்ப்பம்

உயர்தரப் பிரிவு பரீட்சைக்கு தோற்றும் அனைவருக்கும் பல்கலைக்கழகம் செல்ல சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2019 | 4:04 pm

Colombo (News 1st) பல்கலைக்கழக பிரவேசத்திற்கான சந்தர்ப்பத்தை விரிவாக்குதல் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஸவின் “நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை” கொள்கை பிரகடனத்தின் பிரகாரம், க.பொ.த உயர்தரப் பிரிவு பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, பல்கலைக்கழகங்களில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்